Publish Date: Thu, 30 Oct 2008 (15:50 IST)
Updated Date: Thu, 30 Oct 2008 (15:49 IST)
தனது மாமனார் ரஜினி நடித்த படங்களின் பெயரை தனது படத்துக்கு பயன்படுத்திவந்த தனுஷ் அடுத்தகட்டமாக எம்.ஜி.ஆர். பெயருக்கு தாவியுள்ளார்.
இன்றும் எவர் கிரீன் நடிகர் என்றால் அது எம்.ஜி.ஆர்.தான். இன்றும் அவர் படம் வெளியானால் தியேட்டரில் கூட்டம் அம்முகிறது. ஏம்.ஜி.ஆருக்கு எதிராக சின்னதாக முச்சு விட்டாலும் அவரது ரசிகர்களிடமிருந்து கண்டன குரல் கிளம்புகிறது. சுருக்கமாக மரணத்திற்குப் பின்பும் லைவ்வாக இருந்து வருகிறார் எம்.ஜி.ஆர்.
தனுஷ் அடுத்து நடிக்கும் படத்துக்கு மக்கள் திலகம் முத்து என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே சிவாஜியின் திருவிளையாடல் படத்தின் பெயரை பயன்படுத்தி அவரது ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளானார். இப்போ எம்.ஜி.ஆர்.
தனுஷ் வேறு பெயர் தேடுது சாலச் சிறந்தது.