Publish Date: Thu, 30 Oct 2008 (14:21 IST)
Updated Date: Thu, 30 Oct 2008 (14:20 IST)
விருது வாங்கும் படங்களுக்கு ஒரு சாபக்கேடு. சர்வதேச விருதுகள் கிடைத்தாலும் படம் வெளியிட உள்ளுரில் திரையரங்குகள் மட்டும் கிடைக்காது.
இந்த சாபத்தில் சிக்கிக் கொண்ட படம் சேரன் நடிப்பில் டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து. தேசிய விருதுபெற்ற இப்படம் விலை போகாததால் இன்னும் திரையரங்குக்கு வராமல் இருக்கிறது.
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் தயாரான காஞ்சீவரம் படமும் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. ஆனால் ரசிகர்களின் கவலையெல்லாம் மற்ற படங்களை போல இதுவும் திரையரங்குக்கு வராதோ என்பதுதான்.
அந்த கவலை விரைவில் தீர்ந்துவிடும் என்று நம்பிக்கை அளித்துள்ளார் பிரகாஷ்ராஜ். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இவர், அடுத்த மாதம் படம் திரைக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கனடா திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இப்படம் இந்தியன் பனோரமாவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.