Publish Date: Thu, 30 Oct 2008 (14:19 IST)
Updated Date: Thu, 30 Oct 2008 (14:18 IST)
ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் 3 படங்களை தயாரிக்கிறது. ஈரம், ரெட்டைச்சுழி, ஆனந்தபுரத்து வீடு.
இதில் ஆனந்தபுரத்து வீடு படத்தை நாகா இயக்குகிறார். தொலைக்காட்சியில் த்ரில் தொடர்களுக்கு முகவரியாக இருந்தவை நாகா இயக்கிய விடாது கருப்பு, எந்திரப்பறவை போன்றவை.
இவர் இயக்கும் முதல் படம் ஆனந்தபுரத்து வீடு. ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. படத்துக்கு இசையமைப்பவர் ரமேஷ் கிருஷ்ணா, ஒளிப்பதிவு அருண்மணி பழனி. அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.
படத்தின் கதையை நாகாவுடன் இணைந்து எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதியுள்ளார்.