எழுத்தாளர் திருவாரூர் பாபு தனது பெயரை பாபு கே. விஸ்வநாத் என்று மாற்றி இயக்கி வரும் படம் கந்தா. பெயர் மாற்றத்துக்கு காரணம் நியூமராலஜி அல்ல. பாபுவின் அப்பா பெயர் விஸ்வநாத்.
கந்தாவில் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தனது ஆசிரியரை சந்திக்க ஊருக்கு வரும் இளைஞனாக நடித்துள்ளார் கரண். வந்த இடத்தில் நெற்களஞ்சியம் என்று சொல்லப்படும் தஞ்சாவூர் ரத்த பூமியாக மாறியிருப்பதை கரண் பார்க்கிறார்.
அந்த மாற்றத்தில் அவரையும் அறியாமல் பங்குகொள்ள வேண்டி வருகிறது. பிறகு நடப்பது என்ன என்பதை கமர்ஷியலாகவே சொல்லியிருக்கிறேன் என்கிறார் பாபு.
கரணின் ஆசிரியராக இதில் ராஜேஷ் நடித்துள்ளார். நடிப்பிலிருந்து விலகி ரியல் எஸ்டேட் பிஸினஸில் கவனம் செலுத்திவரும் ராnஜஷுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு இது.
கந்தா பொங்கலுக்கு வெளியாகிறது.