Publish Date: Thu, 30 Oct 2008 (14:02 IST)
Updated Date: Thu, 30 Oct 2008 (14:01 IST)
தமிழ் சினிமாவில் இது ஸ்வாதிகளின் காலம். ஆண்டுக்கொரு ஸ்வாதிகள் எங்கிருந்தாவது கிளம்பி வருகிறார்கள்.
தமிழில் ஏற்கனவே ஒரு ஸ்வாதி இருக்கிறார். இவர் அஜித், விஜய் போன்றவர்களுடன் ஆரம்ப காலத்தில் நடித்தவர். தற்போதும் நல்ல வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமான ஹீரோயின் பெயரும் ஸ்வாதி. பழைய ஸ்வாதி அவுட் ஆஃப் போகஸில் இருப்பதால் இவர் தனது பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. இந்நிலையில் கன்னட நடிகை ஸ்வாதியும் தமிழில் அறிமுகமாகிறார்.
சைதை செல்வா என்ற பெயரில் பி. சீதாபதி என்பவர் ஒரு படத்தை இயக்கி வருகிறார். என்கௌண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி பங்க்குமாரின் கதையே சைதை செல்வாவாக உருவாகி வருகிறது. இதில் ஹீரோயினாக ஸ்வாதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
படப்பிடிப்பு அதன் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ஸ்வாதி பெயர் குழப்பம் ஏற்படாமல் இருக்க நல்ல தமிழ் பெயராக தேடி வருகிறார்கள். படத்துக்கும் நல்ல கதையாக தேடியிருக்கலாம்.