Publish Date: Wed, 29 Oct 2008 (14:02 IST)
Updated Date: Wed, 29 Oct 2008 (14:01 IST)
பெயரைப் பார்த்து என்னவோ ஏதோ என்று நினைக்க வேண்டாம். நாளை நமதே படத்தில் கிரணின் கேரக்டர் பெயராம் இது.
மலையாள இயக்குனர் வினயனின் நாளை நமதே படத்தில் கிரணுக்கு வெயிட்டான கேரக்டராம். அப்படி என்ன வெயிட்டான கேரக்டர் என்று விசாரித்ததில் பல சுவாரஸியங்கள்.
இந்தப் படத்தில் முதல் முறையாக பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்கிறார் கிரண். படத்தில் இவரது பெயர், ஜல்சா சரசு. பெயர் ஒரு மாதிரியாக இருந்தாலும் கேரக்டர் சொக்க தங்கமாம்.
அதாவது பாலியல் தொழில் செய்து தன்னை நம்பியிருக்கும் அனாதை குழந்தைகளை காப்பாற்றுகிறாராம்.
இந்த வேடத்துக்காக உடம்பு இளைத்து ஆளே உருமாறியிருக்கிறார். விட்டால் உடம்பு இளைப்பில் சாதனை செய்து வரும் விக்ரம், சூர்யாவுக்கு டஃப் கொடுத்தாலும் கொடுப்பார்.