Publish Date: Wed, 29 Oct 2008 (13:33 IST)
Updated Date: Wed, 29 Oct 2008 (13:33 IST)
கரண் நடிப்பில் விரைவில் அர்த்தநாரி படம் தொடங்கப்படும் என்று கூறினார் இயக்குனர் நந்தா பெரியசாமி.
கந்தா, மலையன், கனகவேல் காக்க படங்களில் நடித்துவரும் கரண் அரவாணி வேடத்தில் நடிக்கயிருக்கும் படம் அர்த்தநாரி. ஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கிய நந்தா பெரியசாமி படத்தை இயக்குகிறார்.
அரவாணி வேடத்தில் நடிகர்கள் தோன்றிய எந்தப் படமும் இதுவரை வெற்றி பெற்றதில்லை. ஆதனால் அர்த்தநாரியில் நடிக்க கரண் தயக்கம் காட்டுவதாகவும், படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அவையெல்லாம் வதந்தி, திட்டமிட்டபடி படம் வெளிவரும் என்று கூறினார் நந்தா பெரியசாமி. இதில் சொல்ல சொல்ல இனிக்கும் படத்தின் நாயகி சாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த மாதம் படத்தின் போட்டோசெஷன் நடைபெறுகிறது.