Publish Date: Wed, 29 Oct 2008 (13:29 IST)
Updated Date: Wed, 29 Oct 2008 (13:28 IST)
கலைஞனை சிறையில் அடைக்கலாம். ஆனால் கலையை? அது காற்று மாதிரி. அதிகாரத்தின் சிறை கம்பிகளுக்கு அதனை தடுத்து நிறுத்தும் வலிமை கிடையாது.
தமிழர் நலனுக்கு குரல் கொடுத்ததற்காக சிறையில் இருக்கும் அமீரின் பருத்தி வீரன் படம் அபுதாபியில் நடக்கும் இந்தியன் பிலிம் பெஸ்டிவெல்லில் திரையிடப்படுகிறது.
யுனைடெட் அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் வருடம்தோறும் இந்தியன் பிலிம் பெஸ்டிவெல் நடத்தப்படுகிறது. நவம்பர் இரண்டாம் தேதி முதல் நடைபெறும் இந்த வருட படவிழாவில் அமீரின் பருத்தி வீரன் திரைப்படம் திரையிடப்படுகிறது.
தமிழிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஒரே திரைப்படம் பருத்தி வீரன் என்பது குறிப்பிடத்தக்கது.