Publish Date: Wed, 29 Oct 2008 (13:27 IST)
Updated Date: Wed, 29 Oct 2008 (13:26 IST)
மதுரை மத்திய சிறையில் ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்ததற்காக அடைக்கப்பட்டிருக்கும் சீமான் மற்றும் அமீரை பாரதிராஜா நேற்று சந்தித்து பேசினார்.
தமிழர்களுக்கு குரல் கொடுத்து சிறை சென்ற இயக்குனார்கள் சீமான், அமீர் இருவரையும் சந்திக்க பாரதிராஜா, பாலா, சேரன், பாலாஜி சக்திவேல், சசி குமார், நடிகர்கள் சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் நேற்று மதுரை மத்திய சிறைக்கு சென்றனர்.
சிறையில் இருந்தவர்களுடன் உரையாடிய பாரதிராஜா, சிறையில் சீமானும், அமீரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்தார். தமிழருக்காக குரல் கொடுத்து சிறை சென்றதற்காக தாங்கள் பெருமைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்ததாக பாரதிராஜா கூறினார்.
இருவரையும் ஜாமினில் விடுவிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Wed, 29 Oct 2008 (13:27 IST)
Updated Date: Wed, 29 Oct 2008 (13:26 IST)