பழைய பாடல்களை ரீ-மிக்ஸ் செய்து தான் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களிலும் பயன்படுத்தி வந்தவர் இசையமைப்பாளர் டி. இமான். அப்படி அவர் இசையமைத்த பாடல்கள் ஏராளம்.
அது சினிமாவில் ஒரு புது டிரெண்டாகவும் வளர்ந்து தற்போது வரும் எல்லா படங்களிலும் ஒரு பாட்டு வைத்துவிடுகிறார்கள்.
விரைவில் வெளியாக உள்ள 'பெருமாள்' சுந்தர் சி நடிக்கும் படத்தில் கூட 'காதல் வைபோகமே' என்ற பாடலை கலைஞர் பேரன் பாட பாடல் வெளியானது.
அதேபோல, 'குதிரை' என்ற ஒரு படம், 'நாயகன்' படத்தில் நடித்த ரமணா நடிக்கும் படம். இதில் டி.ஆர். மகாலிங்கம் பாடிய 'செந்தமிழ் தேன் மொழியாள்' என்ற பாடல் ரீ-மிக்ஸ் செய்திருக்கிறார்கள்.
இதே பாடலை ஏற்கனவே 'திலோத்தமா' என்ற படத்தில் புதிய இசையமைப்பாளர் சரோஜ்பாபு இசையமைத்து விரைவில் கேசட்டும் வெளியாகயிருக்கிறது.
ஆக, ஒரே பாடலைக் கூட பல படங்களில் ரீ-மிக்ஸ் செய்வதும் கூட இன்று ட்ரெண்ட் ஆனாலும் ஆகலாம். இதைத்தான் நோகாமல் நோன்பு கும்பிடுவது என்பது.