Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆயுதத்துக்கு ஆயுதமே தீர்வு!

Advertiesment
சங்கரா சிங்கமுத்து வாசன் கார்த்திக்
, செவ்வாய், 28 அக்டோபர் 2008 (17:40 IST)
வேகமாக வளர்ந்து வருகிறது 'சங்கரா' படம். நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக் நடிக்கும் படமான இதில், வடிவேலு புதுவிதமான கெட்டப்பில் நடிக்கவிருக்கிறார்.

இவ‌ர்களுட‌ன் சிங்கமுத்துவும் இதில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு இயக்குனர் ராஜ்கண்ணனின் சொந்த ஊரான பொன்னமராவதி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் படம் பிடித்துவிட்டு வந்திருக்கிறார்.

ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் இரண்டு அதிரடி சண்டைக் காட்சிகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார். வாசன் கார்த்தி கிராமத்து வில்லன்களுடன் செம்மண் புழுதி பறக்கும் இந்த இரண்டு சண்டைக் காட்சிகளும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்கிறார் இயக்குனர் ராஜ்கண்ணன்.

மேலும், ஆயுதம் எடுத்தவர்களை ஆயுதம் மூலமே பதில் சொல்லி அடக்கும் கதைதான் சங்கரா. இதில் வாசன் கார்த்திக்கின் கெட்டப்பும் வித்தியாசமாக, அனைவராலும் பேசப்படும் என்பதோடு... அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil