Publish Date: Tue, 28 Oct 2008 (16:26 IST)
Updated Date: Tue, 28 Oct 2008 (16:25 IST)
தொடர்ந்து வாய்ப்பு இல்லாமல் போனதால் அவ்வப்போது படங்களில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார் வில்லன் நடிகர் ஆனந்தராஜ்.
அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் 'கொட்டாரம் தாலுகா திருநெல்வேலி ஜில்லா'. இதில் எம்.ஜி.ஆர். போல அரும்பு மீசை கெட்டப்பில் வித்தியாசமான போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம்.
நீண்ட நாளைக்குப் பின் இப்படி அருமையான கேரக்டர் கிடைத்திருக்கிறது என நண்பர்களிடம் பெருமையுடன் சொல்லி வருகிறார் ஆனந்தராஜ்.
அதாவது அவரது எல்லைக்குட்பட்ட ஊரில் ரவுடித்தனம் செய்பவர்களை கூட்டி வந்து மீசையை எடுத்துவிட்டு மொட்டையாக அனுப்பும் அதிரடி இன்ஸ்பெக்டராம் இவர்.
இப்படி ரவுடிகளை அசிங்கப்படுத்துவதோடு அந்த ஊரில் உள்ள ஒரு காதல் ஜோடியை சேர்த்தும் வைக்கிறாராம்.
இத்தனைப் படங்களில் காதல் ஜோடிகளுக்கு வில்லனாக இருந்தவர் இந்தப் படம் மூலம் காதலர்களுக்கு நல்லது செய்வதான பாத்திரம் என்று நெகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்.