Publish Date: Sat, 25 Oct 2008 (15:36 IST)
Updated Date: Sat, 25 Oct 2008 (15:36 IST)
எம்.ஜி.ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன் அது வெளியான காலத்தில் பல சாதனைகளை புரிந்தது தெரியும். அதனை ஒரு சாதாரண நிகழ்வு என்று சொல்கிறவர்களுக்கும், இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அப்படம் வசூலை குவிப்பதை விளக்க வார்த்தைகள் கிடைக்காது என்பது நிஜம்.
சென்ற வாரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் முதல் நாள் பைலட் திரையர கில் ஐம்பதாயிரம் ருபாய் வசூலித்துள்ளது. இது பழைய படங்கள் இதுவரை நிகழ்த்தியிராத சாதனை.
விஷயம் இதுவல்ல. இந்தியில் அமீர்கான், ஷாருக்கான், அமிதாப் இவர்களுடன் நடித்துவரும் மாதவன் தனக்குப் பிடித்த படம் என்று உலகம் சுற்றும் வாலிபன் படத்தையே குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி உலகம் சுற்றும் வாலிபன் படத்தை ரீ-மேக் செய்தால் அதில் நடிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாதவனின் துரதிர்ஷ்டம், அவருக்குமுன் அதே படத்துக்கு ஆசைப்பட்டு வெகு விரைவில் உலகம் சுற்றும் வாலிபனின் ரீ-மேக்கில் நடிக்க உள்ளார் சுந்தர் சி.