Publish Date: Sat, 25 Oct 2008 (15:32 IST)
Updated Date: Sat, 25 Oct 2008 (15:32 IST)
அண்ணன், தம்பிகள் ஒரு பெண்ணால் பிரிந்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமின்றி அந்த ஊரே பாதிக்கப்படுகிறது. பிந்தவர்கள் இறுதியில் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதை தஞ்சை விவசாயிகளின் பிரச்சனையை உள்ளடக்கி காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சுப. தமிழ்வாணன்.
நடிகர் சரண்ராஜ், தமிழ்செல்வன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் பிரதான கேரக்டரே இவருடையதுதான். இவருடன் புதுமுகங்கள் கிருஷ்ணா, புவனேஸ்வரி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஆறுபடை பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு யாணி தேஷ் இசையமைத்துள்ளார். மரபின் மைந்தன் முத்தையா, இளைய கம்பன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
படம் விரைவில் வெளியாக உள்ளது.