Publish Date: Sat, 25 Oct 2008 (15:21 IST)
Updated Date: Sat, 25 Oct 2008 (15:21 IST)
தமிழ் திரையிசையில் எம்.எஸ். விஸ்வநாதனின் பங்களிப்பு மகத்தானது. அதற்கேற்ற கௌரவம் தமிழ் சமூகம் வழங்கியிருக்கிறதா என்றால் இல்லை.
இந்நிலையில் கேரளாவில் வழங்கப்படும் ஸ்வரலயா கைரளி யேசுதாஸ் விருதுக்கு எம்.எஸ்.வி. தேர்வு செய்யப்பட்டுள்ளார். இசைக் கலைஞர்களுக்காக வழங்கப்படும் மிகப் பெரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.வி.யுடன் பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தியும் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது.