Publish Date: Sat, 25 Oct 2008 (14:28 IST)
Updated Date: Sat, 25 Oct 2008 (14:27 IST)
ஏகன் இன்று வெளியாகிறது. அஜித் நடித்த படங்களிலேயே இந்தப் படத்துக்குதான் அதிக ப்ரிண்ட் போடப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய இயக்குனர் ராஜு சுந்தரம், உள்நாடு, வெளிநாடு எல்லாம் சேர்த்து மொத்தம் 400 ப்ரிண்டுகள் போட்டிருப்பதாக தெரிவித்தார்.
சென்னையில் மட்டும் பதினான்கு திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.
அஜித்தின் முந்தைய படமான பில்லா சென்னையில் மட்டும் ஏறக்குறைய ஐந்து கோடி வசூலித்தது.
பில்லாவுக்குப் பிறகு கமலின் தசாவதாரம் மட்டுமே இந்த வசூலை தாண்டியிருக்கிறது (ஏறக்குறைய 10 கோடி) என்பது குறிப்பிடத்தக்கது.
பில்லாவைவிட ஏகனுக்கு அதிக பிரிண்டுகள் போடப்பட்டுள்ளதால் பில்லா வசூலை ஏகன் எளிதாக ஓவர்டேக் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.