Publish Date: Sat, 25 Oct 2008 (14:26 IST)
Updated Date: Sat, 25 Oct 2008 (14:26 IST)
கேரளாவின் சாலக்குடியில் ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வருகிறார் மணிரத்னம். ஷங்கரின் எந்திரன், மணிரத்னத்தின் படம் என ஒரே நேரத்தில் இரு மெகா படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்து இரு படப்பிடிப்பிலும் தவறாமல் கலந்து கொள்கிறார் ஐஸ்.
மணிரத்னம் படத்தில் விக்ரமுக்கு என்ன வேடம் என்பது சஸ்பென்ஸ். சுசி. கணேசனின் கந்தசாமியை முடித்துவிட்ட விக்ரம் மணிரத்னம் படத்துக்காக தயாராகி வருகிறார்.
இந்தப் படத்தில் மொட்டை தலை, குறுந்தாடியுடன் இதுவரை தோன்றாத வித்தியாச கெட்டப் இவருக்கு என்கிறார்கள். படத்தில் விக்ரமுடன் ப்ருத்விராஜ், ப்ரியாமணி, கிருஷ்ணா, வேலு பிரபாகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.