Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யோகாவுக்கு என் தந்தையே குரு!

Advertiesment
யோகாவுக்கு என் தந்தையே குரு!
, வெள்ளி, 24 அக்டோபர் 2008 (20:15 IST)
தன்னைப் போலவே எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தன் இரு மகன்களான நடிகர் சூர்யா, கார்த்திக் ஆகியோருக்கு யோகா கற்றுத் தந்திருக்கிறார் நடிகர் சிவக்குமார். அத்தோடு தன் இளமைக்கும் அதுதான் காரணம் என்றும் கூறுகிறார்.

அதன்படி தற்போது சூர்யா நடித்து வெளிவர இருக்கும் வாரணம் ஆயிரம் படத்தில் யோகா பயிற்சி மூலம் சிக்ஸ அப்ஸ் காட்டியிருக்கிறார்.

அப்படி அவரின் உடற்கட்டைக் கண்டு தன் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாகக் கூறி கே.எஸ். ரவிக்குமார் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் சரத்குமார் நடிக்கும் படம் முடிந்ததும் அடுத்ததாக சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளார். அத்தோடு ஹரி இயக்கம் 'சிங்கம்' படத்திலும் நடிக்கவுள்ளார் சூர்யா.

மேலும் தற்போது கே.வி. ஆனந்த் இயக்கும் அயன் படத்துக்காக மும்பையிலிருந்து 300 மைல் தொலைவில் உள்ள பிரசித்திபெற்ற மலைப் பிரதேசத்தில் க்ளைமாக்ஸ் காட்சிக்காக செல்லவிருக்கிறார்.

எந்த விஷயத்துக்கும் உடல் அரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார் சூர்யா.

Share this Story:

Follow Webdunia tamil