கண்டிஷன் போடுவதில் த்ரிஷாவின் அம்மாவைப் போல வேறு எந்த நடிகையின் அம்மாவும் இல்லை என்று பேசி வருகிறார்கள் சினிமா துறையினர்.
ஆரம்பத்தில் புதுமுகங்களோடு நடிக்கமாட்டார், பெரிய பெரிய ஹீரோக்களுடன்தான் த்ரிஷா ஜோடி சேருவார் என்றார். அதன்பின் கதை கேட்டு நல்ல கதாபாத்திரமாக இருந்தால்தான் ஒப்புக்கொண்டு நடிப்பாள் என்றார். பின் கிளாமராக நடிக்கமாட்டாள் என்றார்.
தற்போது போட்டிருக்கும் கண்டிஷன் இதுதான். அதாவது ஆர்யாவுக்கு ஜோடியாக 'சர்வம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு காட்சி நீச்சல் குளத்தில் நீந்துவது போல... அதாவது 'பில்லா' பட நயன்தாராவை மிஞ்சும் அளவுக்கு.
நடிக்கும்போது ஒப்புக்கொண்டுவிட்டு இப்போது திரையில் வரலாம், ஆனால் விளம்பரங்களில் அந்த ஸ்டில்லை காட்டக்கூடாது என்ற உத்தரவை போட்டுள்ளார்.
இப்படி இவரின் புது கண்டிஷனால் என்ன செய்வது என்று தவித்து வருகிறார் இப்பட இயக்குனர்.