Entertainment Film Featuresorarticles 0810 24 1081024092_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமா சென்டிமெண்ட்!

Advertiesment
சினிமா சென்டிமெண்ட் ஸ்ரீகாந்த் கல்யாணம் அதிர்ஷ்டம்
, வெள்ளி, 24 அக்டோபர் 2008 (19:19 IST)
ஒவ்வொருவருக்கும் ஒரு சென்டிமெண்ட். அதுவும் சினிமாவில் சொல்லவே வேண்டாம். எதற்கெடுத்தாலும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பார்கள்.

தனக்கென சிலர் சாமியார்களை வைத்துக்கொண்டு அவர் சொற்படி கதை சொல்வதற்காக செல்வதும், படத்துக்கான டெக்னிஷியன்களின் ஜாதகத்தை ஒப்பிட்டுப் பார்க்க சிலர் ஜோதிடர்களை நாடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

அவ்வரிசையில் தற்போது நடிகர் ஸ்ரீகாந்தும் சேர்ந்துவிட்டார். முன்பெல்லாம் பட ஷூட்டிங்கிற்கு செல்லும்போது தனது பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிச் சென்றவர், தற்போது மனைவி முகத்தில் விழிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அவர் வந்த ராசிதான் இன்று பத்து படங்களுக்கு மேல் நடித்துக்கொண்டு இருக்கிறேன் என்கிறார்.

அதனால் டல்லடிக்கும் சில இளம் நடிகர்களும் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்றும் யோசித்து வருகிறார்கள். எது எப்படியோ, நல்லது நடந்தால் சரி. ஆனால் அதிர்ஷ்டம் என்ற பெயரில் மனைவிகளை தொல்லை கொடுக்காமல் இருந்தால் சரிதான்.

Share this Story:

Follow Webdunia tamil