Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிரடி ஆபரேஷன்கள்!

Advertiesment
அதிரடி ஆபரேஷன்கள்!
, வெள்ளி, 24 அக்டோபர் 2008 (17:32 IST)
ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமா ரசிகர்களின் ரசனை மாறிவந்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக நடிகைகள் கொழுக் மொழுக்கென்று இருக்க வேண்டும். அதாவது அப்போது ஜெயமாலினி, அனுராதா போன்ற நடிகைகள் கவர்ச்சியில் கலக்கிக் கொண்டிருந்தார்.

அப்படி சற்று குண்டான நடிகைகளை ரசித்து வந்த காலம் போய் தற்போது சிம்ரன், த்ரிஷா, அஸின் போன்ற ஒல்லிப்பிச்சான் நடிகைகளைத்தான் இன்றைய இளம் ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

அப்படி கண்ணுக்கு கொஞ்சம் குண்டாக தெரிந்தால் அவர்களின் மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் கலங்கிப்போன சில நடிகைகள் ஆபரேஷன் மூலம் சதையைக் குறைக்கும் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

அவ்வரிசையில் கிரண், நயன்தாரா, தமன்னா ஆகியோர் அடங்குவார்கள். அதற்காக பல லட்சங்களை செலவு செய்து வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்து வந்துள்ளனர்.

ஆனால் பத்திரிக்கை பேட்டிகளில் காலையில் ஒரு இட்லி, மதியம் ஜூஸ், இரவில் இரண்டு சப்பாத்தி என்று தன் இளமை ரகசியம் பற்றி சொல்வார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil