Publish Date: Fri, 24 Oct 2008 (17:28 IST)
Updated Date: Fri, 24 Oct 2008 (17:28 IST)
ஆரம்பத்தில் துணை நடனக் கலைஞராக இருந்து பல படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக ஆடிவந்தவர் நடிகர் லாரன்ஸ். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக நடன நுணுக்கங்களை கற்று நடன இயக்குனராகி தற்போது வெற்றிப்பட இயக்குனர்கள் வரிசையிலும் இடம் பிடித்திருக்கிறார்.
அப்படி ஆரம்பத்தில் தனக்கு ஆட சினிமாவில் சான்ஸ் கொடுத்து தன் குழுவில் வைத்துக் கொண்டவர் நடன இயக்குனர் ஜான்பாபு. இவர் குஷ்புவுடன் ஆடிய 'ஒத்தரூபா தாரேன்' பாட்டு மிகப் பிரபலம்.
ஆரம்பத்தில் அரவணைத்த ஜான்பாபுவை தற்போது ஒரு விழாவில் சந்தித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். கீழே அமர்ந்திருந்த ஜான்பாபுவை மேடைக்கு அழைத்து 'இவர் இல்லையென்றால் நான் இல்லை' என்று பெருமிதப்பட்டிருக்கிறார் லாரன்ஸ்.
இவரின் பாராட்டைக் கண்ட ஜான்பாபு மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார். லாரன்ஸ் பவுண்டேஷன் பெயரில் பல ஆதரவற்றவர்களை அரவணைக்கும் இவர், தன் குருவை மறப்பாரா என்ன?