யுவன் ஷங்கர் ராஜா ஆரம்பித்திருக்கும் பியர்ல் ஸ்டோன் என்டர்டெயின்மெண்ட் பிரைவட் லிட். தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை இயக்குனர் சபா இயக்குகிறார்.
இயக்குனர் செல்வராகவன், கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணா, யுவன் ஆகிய மூவரும் இணைந்து முன்பு ஒயிட் எலிஃபெண்ட்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கினர். நண்பர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் எதுவும் தயாரிக்கும் முன்பே அந்நிறுவனம் மூடுவிழா கண்டது.
தற்போது பியர்ல் ஸ்டோன் என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் புதிய படநிறுவனம் தொடங்கியிருக்கும் யுவன், இயக்குனர் சபா இயக்கும் படத்தை தயாரிக்கிறார். படத்தின் கதையை யுவனே எழுதியிருப்பது ஒரு சிறப்பம்சம். இன்னும் பெயர் வைக்கப்டாத இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.
இதே சிவா நடிக்கும் 16 என்ற படத்தை சபா இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.