Publish Date: Thu, 23 Oct 2008 (15:27 IST)
Updated Date: Thu, 23 Oct 2008 (15:27 IST)
இயக்குனர் அமீர் நடிகராக அறிமுகமாகும் படம். படத்தை இயக்குவது சுப்ரமணிய சிவா என்றாலும் சொந்தப் படத்தைவிட அதிக அக்கறை எடுத்து படத்தை உருவாக்கி வருகிறார் அமீர்.
இந்தப் படத்தில் குப்பத்தை சேர்ந்தவராக நடிக்கிறார் அமீர். படம் பார்த்தால் அதை பார்ப்பவர்கள் நம்ப வேண்டுமே? அதற்காகவே வீட்டில் ஜிம் ஒன்றை உருவாக்கி தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார். சப்பாத்தியும், முட்டையும் மட்டுமே சாப்பாடு.
ஏல்லாம் சரி, படத்தை எப்போது கண்ணில் காட்டுவீர்கள் என்று கேட்டால், நானே காசு போட்டு எடுக்கும் படம். நாள் தள்ளிப் போனால் யாருக்கும் நஷ்டம் கிடையாது. எல்லோரையும் போல் நாள் கணக்குப் பார்த்து என்னால் படம் பண்ண முடியாது. படம் நன்றாக வர வேண்டும். அதுதான் முக்கியம் என்கிறார்.
எது எப்படியானாலும் வரும் பொங்கலுக்கு திரையில் யோகியை கண்டு ரசிக்கலாம் என்று கியாரண்டி தருகிறார். பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம்.