Publish Date: Thu, 23 Oct 2008 (15:19 IST)
Updated Date: Thu, 23 Oct 2008 (15:19 IST)
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விஜய் நடித்த குருவி படத்தை தயாரித்தது.
இதோ முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்து இன்னுமொரு வாரிசு. முதல்வரின் மகன் அழகிரியின் மூத்த மகன் தயாநிதி அழகிரியும் சினிமா ஜோதியில் ஐக்கியமாகியிருக்கிறார்.
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த வாரணம் ஆயிரம் படத்தின் விநியோக உரிமையை தயாநிதியின் புதிய பட நிறுவனமான கிளவுட் நைன் மூவி வாங்கியுள்ளது. விரைவில் படங்களை நேரடியாக தயாரிக்கும் எண்ணமும் தயாநிதிக்கு இருக்கிறது.
அரசியல் போட்டி சினிமாவில் தொடராமல் இருந்தால் சரிதான்.