மெய்யோடு பொய்யாக ஊர் தூங்கும் நேரம்
இருளோடு ஒளியிங்கு போர் செய்யும் காலம்
கோட்டானும் சாத்தானும் இரை தேடும் ஜாமம்
இருந்தாலும் இறந்தாலும் பொல்லாதது ஏமம்..
இரா படத்தில் இடம்பெறும் இந்தப் பாடலை எழுதியவர் மறைந்த கவியரசர் கண்ணதாசன் என்றால் நம்ப முடிகிறதா? என்ன விவகாரம் என்பதை சொல்லும் முன் இரா படம் பற்றி ஒரு சின்ன அவுட்லைன்.
ஆவி உலகம் பற்றி ஆராய முணாறு பங்களாவுக்கு செல்கிறார் ஒருவர். அங்கு அவர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவர் மரணத்துக்கு என்ன காரணம் என்று போகிறது கதை.
இந்தப் படத்துக்காக மேலே உள்ள பாடலை கண்ணதாசனின் ஆவியை வரவழைத்து எழுதி வாங்கினார்களாம். சி.எம். ரத்தினசாமி என்ற மீடியத்தின் துணையுடன் இதனை சாதித்ததாக கூறினார்கள் படத்தின் இயக்குனர்கள். (இராவை 3 பேர் இணைந்து இயக்குகிறார்கள்).
கண்ணதாசன் முடிக்காமல்விட்ட இயேசு காவியத்தை ரத்தினசாமியை வைத்துதான் முடித்தார்களாம். அவர்தான் இந்தப் பாடலையும் கண்ணதாசனின் ஆவியுடன் தொடர்பு கொண்டு எழுதி வாங்கினாராம்.
நம்பினால் நம்புங்கள் பகுதியில் போட வேண்டிய செய்தி.