Publish Date: Wed, 22 Oct 2008 (17:15 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (17:15 IST)
பாலசந்தர், பாரதிராஜா, சீனிவாசன்... தாமிராவின் ரெட்டைச்சுழியில் எல்லாமே பெரிய பெயர்கள். கார்த்திக் ராஜா இசையில் மூன்று பாடல்கள் ஒலிப்பதிவான நிலையில் முதல் ஷெட்யூலுக்கு நெல்லைக்கு கிளம்புகிறார்கள்.
நவம்பர் மூன்று முதல் தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். கிராமத்து கதையான இதில் குழந்தைகளை பற்றியும் பல காட்சிகள் இடம்பெறுகிறது என்கின்றது படம் குறித்துவரும் தகவல்கள்.
ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. ஆரோக்கியராஜ் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.