மிருகம் படத்தில் நடித்தபோதே யார்யா இது என்று திரும்பிப் பார்க்க வைத்தவர் சோனா. குசேலன் படம் சோனாவை சூப்பர் ஸ்டார் வரை கொண்டு சேர்த்தது.
இவர் ஹீரோயினாக நடித்த பத்து பத்து படம் தயாரிப்பாளர்களை இவர் வீட்டு முன் க்யூ நிற்க வைத்தது. ஆனால் இதுவரை யார் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை இவர். என்ன காரணம்?
எல்லோரும் ஒரே மாதிரி கிளாமராக நடிக்கச் சொல்கிறார்களாம். இதனால் கேரளா பக்கம் கவனத்தை திருப்பியிருப்பவர், டி.கே. விஜயன் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மதூர் பண்டார்கர் இயக்கத்தில் தபு நடித்த சாந்தினி பார் படத்தின் ரீ மேக்காம் இது.
மும்பை பார்களில் வேலை செய்யும் பெண்களை பற்றிய படம் சாந்தினி பார். கேரளா பார்களில் பெண்கள் வேலை பார்ப்பதில்லை. அப்படியிருக்கையில் சாந்தினி பாரை எப்படி மலையாளத்தில் ரீ மேக் செய்ய முடியும் என்பது கேள்விக்குறி.
ஷகிலா தேசத்தில் சோனா எச்சரிக்கையாக இருப்பது நல்லது.