தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுபற்றி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.
தீபாவளியை முன்னிட்டு ஒருவார காலத்திற்கு திரையரங்குகளில் தினமும் ஐந்து காட்சிகள் திரையிடலாம். அதாவது அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை கூடுதல் காட்சிகள் அனுமதிக்கப்படும்.
டூரிங் டாக்கீஸில் மதிய காட்சிகளை இந்த ஒரு வாரம் திரையிட்டுக் கொள்ளலாம். ஆனால் கட்டணத்தை உயர்த்த அனுமதி இல்லை.