Publish Date: Wed, 22 Oct 2008 (17:08 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (17:08 IST)
ஒளிப்பதிவாளா பி.சி. ஸ்ரீராம் ஒரு படத்தை அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்ள மாட்டார். முழு ஸ்கிரிப்டும் படித்து அவருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே கேமராவை கையிலெடுப்பார்.
அப்படி ஸ்கிரிப்ட் படித்து பி.சி. ஸ்ரீராம் தேர்வு செய்தது, தெலுங்கு இயக்குனர் தேஜா இயக்கிய படம். கத்திக்கப்பல் படத்தில் நடித்த அனுப் இதில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
கத்திக்கப்பல் மூலம் அனுப் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானதால் தேஜாவின் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகின்றன.