Publish Date: Wed, 22 Oct 2008 (17:06 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (17:06 IST)
இன்று படம் இயக்க வரும் இளைஞர்களிடம் பல நல்ல மாற்றங்களைக் காண முடிகிறது. வன்முறை படங்களில்கூட குழந்தைகளை பற்றி நல்ல பதிவுகள் இடம்பெறுகின்றன. உதாரணம், கற்றது தமிழ்.
இயக்குனர் மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி படத்தில் பாடலாசிரியர் ஏகதாசி குழந்தைகளுக்கான பாடலொன்றை எழுதியுள்ளார்.
குச்சு குச்சு கூட்ஸ் வண்டி
கழுகு மலை வழியா கோயில்பட்டி வண்டி - எனத் தொடங்கும் அந்தப் பாடல் முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி வருகிறது.
இதேபோல் ரெட்டைச்சுழி படத்திலும் குழந்தைகள் பாடலொன்று இடம்பெறுகிறது. இதுபோன்ற நல்ல விஷயங்கள் ஒருபுறம் இருக்க, குழந்தைகளை மையப்படுத்தி ராசி. அழகப்பன் எடுத்த வண்ணத்துப்பூச்சி படம் இன்னும் திரைக்கு வராமலே உள்ளது.
திரைப்படங்களுக்கு மானியம் கொடுக்கும் அரசு இதனை கவனத்தில் கொண்டால் நல்ல படங்களுக்கும் வழி பிறக்கும்.