Publish Date: Wed, 22 Oct 2008 (17:04 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (17:04 IST)
சத்யம் படத்திற்குப் பிறகு விஷால் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது சஸ்பென்ஸாகவே இருந்தது. அந்த மர்மத்திற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது.
இயக்குனர் பூபதி பாண்டியனின் உதவியாளர் ஐயப்பன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விஷால். இந்தப் படத்தை ஜி.கே. பிலிம்ஸ் தயாரிக்கிறது.
சத்யத்திற்குப் பிறகு பிருத்வி இயக்கும் படத்தில் விஷால் இரண்டு வேடங்களில் நடிப்பதாக இருந்தது. அதன் பட்ஜெட் மிக அதிகம் என்பதால் அதனை ஒத்திவைத்து ஐயப்பனின் படத்தில் நடிக்கிறார். சத்யம் வெற்றி பெறாததால் ஏற்பட்ட தடீர் மாற்றம் இது என்கிறார்கள்.