Publish Date: Wed, 22 Oct 2008 (14:26 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (14:23 IST)
தீபாவளி படங்களில் அஜித்தின் ஏகனுக்கு இணையாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ஹரியின் சேவல். ஹரி கடைசியாக இயக்கிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட் என்பதால் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
படத்தில் வடிவேலு நடித்திருப்பதும் இந்த அதிகபடியான எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம். படத்தில் அவர் ஏறக்குறைய இரண்டாவது ஹீரோவாக வருகிறார். சரியாகச் சொன்னால் படதில் இவர் 35 காட்சிகளில் நடித்திருக்கிறார். அதாவது, இரண்டு காட்சிக்கு ஒரு காட்சியில் வடிவேலு நடித்திருக்கிறார்.
ஆக்சனுக்கு இணையாக படத்தில் காமெடி காட்சிகள் இருப்பதால் படம் நிச்சயம் வெற்றிபெறும் என்பது அனைவரின் கணிப்பு.