Publish Date: Wed, 22 Oct 2008 (14:25 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (14:21 IST)
தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் ஏகன், சேவல் இரண்டுக்கும் யு சான்றிதழ் அளித்துள்ளது சென்சார்.
கௌதமின் வாரணம் ஆயிரம் தந்தை, மகன் உறவை பிரதானமாக வைத்து தயாராகியிருக்கிறது. சூர்யாவுடன் திவ்யா, சமீரா ரெட்டி, சிம்ரன் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
செல்வாவின் இயக்கத்தில் மாதவன் நடித்திருக்கும் குரு என் ஆளு படத்துக்கு யு / ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.