Publish Date: Wed, 22 Oct 2008 (14:25 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (14:18 IST)
ராஜு ஈஸ்வரன் இயக்கும் பஞ்சாமிர்தம் படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.
புராண கதையை இன்றைய காலத்துடன் இணைத்து ராஜு ஈஸ்வரன் பஞ்சாமிர்தம் படத்தை எடுத்து வருகிறார்.
தனது பணக்கார தாத்தாவை தேடி ஊட்டிக்கு வருகிறார் சரண்யா மோகன். வந்த காரியம் நிறைவேறாமல் தற்கொலை செய்ய முயலும் அவர் மாரிசனின் கல்லறையின் மீது விழுகிறார்.
மாரிசன் அவரை காப்பாற்றி சரண்யா மோகனின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறார். இதில் ஜெயராம், நாசர், அரவிந்த் மற்றும் இயக்குனர் ராஜு ஈஸ்வரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் பஞ்சாமிர்தம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.