Publish Date: Tue, 21 Oct 2008 (19:28 IST)
Updated Date: Tue, 21 Oct 2008 (19:25 IST)
தெலுங்கில் சிவப்பு ரோஜாக்கள் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த பழைய சிவப்பு ரோஜாக்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது டப்பிங் படம்.
ஆதிராஜன் இயக்கத்தில் மோனிகா, முன்னா நடித்த சிலந்தி படத்தை தெலுங்கில் சிவப்பு ரோஜாக்கள் என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். த்ரில்லர் படம் என்பதால் புகழ்பெற்ற பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள் பெயரில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.
சிலந்தி தமிழில் போட்ட காசுக்கு பழுதில்லாமல் ஓடியது குறிப்பிடத்தக்கது.