அக்டோபர் 25 வெளியாக இருக்கும் அஜித்தின் ஏகன் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
மேன் ஹுன் னா படத்தின் ரீ-மேக்கான ஏகனில் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார் அஜித். ஹாங்காங்கில் எடுக்கப்பட்ட சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் அஜித்.
சண்டை காட்சிகளுக்காக படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்குமோ என்ற பயம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் படத்தை பார்த்த சென்சார் யு சான்றிதழ் அளித்துள்ளது.
தீபாவளிக்கு வெளியாகும் ஹரியின் சேவல் படத்துக்கும் யு சான்றிதழே வழங்கியுள்ளது சென்சார்.