Publish Date: Tue, 21 Oct 2008 (16:22 IST)
Updated Date: Tue, 21 Oct 2008 (16:22 IST)
ப்ரியாமணி மலையாளத்தில் நடித்த திரக்கதா படம் சூப்பர் ஹிட். நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் ப்ரியாமணி, ஸ்ரீவித்யாவின் வேடத்தை ஏற்று நடித்திருந்தார்.
இதற்குமுன் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் சேட்டன்களின் மனதில் அவர் முழுமையாக இடம் பிடித்தது இந்தப் படத்தில்தான். இதற்குப் பிறகு ப்ரியாமணியை தேடி நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால் அவர்தான் சீனிலேயே இல்லை.
தமிழில் ஆறுமுகம், மணிரத்னத்தின் படம், நினைத்தாலே இனிக்கும் என ஏக பிஸி. தெலுங்கிலும் ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். வாய்ப்பு இல்லாத போது கை கொடுத்தது மலையாளம் என்றாலும், தமிழ், தெலுங்கில் சம்பளம் அதிகம் என்பதால் சேட்டன்களின் அழைப்புக்கு செவி சாய்க்காமலிருக்கிறார் ப்ரியாமணி.
நியாயம்தானே?