Publish Date: Tue, 21 Oct 2008 (16:17 IST)
Updated Date: Tue, 21 Oct 2008 (16:17 IST)
ஜெகன்நாத் தனது அடுத்தப் படத்தில் மீண்டும் ஐந்து ஹீரோயின்களை நடிக்க வைக்கிறார். ராமன் தேடிய சீதை வெற்றி பெற்றதால்தான் இந்த அதிரடி தீர்மானம் என்பதை சொல்ல தேவையில்லை.
ஜனவரியில் ஆரம்பிக்கும் இந்தப் படத்தில் பசுபதி ஹீரோ என்பது தெரியும். ஹீரோயின்களாக ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த நவ்யா நாயரையும், விமலா ராமனையும் தேர்வு செய்துள்ளார்.
ராமன் தேடிய சீதை படத்தில் சின்ன வேடத்தில் நடித்த நவ்யாவுக்கு இதில் முக்கியமான வேடம் கொடுத்திருக்கிறார் ஜெகன்நாத்.