Publish Date: Sun, 19 Oct 2008 (15:43 IST)
Updated Date: Sun, 19 Oct 2008 (15:42 IST)
இலங்கை தமிழர் பிரச்சனையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது, தமிழ் திரையுலகம். ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறும் பேரணியுடன் இந்தப் போராட்டம் முடியப் போவதில்லை என்பதை பாரதிராஜா தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்த போராட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள். நவம்பர் 1ஆம் தேதி நடிகர் சங்கம் தனியாக உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.
இது பற்றி கருத்து தெரிவிக்காத பாரதிராஜா, முதல்வர் அறிவித்துள்ள மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து திரையுலகினரும் கலந்து கொள்வார்கள் என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.