Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அபியும் நானும் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை

அபியும் நானும் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை
ராதா மோகனின் அபியும் நானும் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை. இந்தப் படம் மடடுமல்ல, கடைசி நேர பிரச்சனையில் மேலும் சில பட‌ங்கள் போட்டியிலுருந்து விலகும் என்று தெ‌ரிகிறது.

முன்பு தீபாவளி என்றால் ஒரு டஜன் பட‌ங்களாவது திரைக்கு வரும். இப்போது அரை டஜன் பட‌ங்கள் வெள்ளித்திரையை கண்டாலே அபூர்வம். பெ‌ரிய பட‌ங்களை அதிக திரையர‌ங்குகளில் வெளியிடுவதால் சின்ன பட‌ங்கள் மட்டுமின்றி சில பெ‌ரிய பட‌ங்களுக்கே திரையர‌ங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த வருட தீபாவளிக்கு சிறிய பட‌ங்கள் எதுவும் வெளியாகவில்லை என்கின்றன தகவல்கள். சிலம்பாட்டம், படிக்காதவன் பட‌ஙக‌ள் ஏற்கனவே போட்டியிலிருந்து விலகிய நிலையில் அபியும் நானும் படத்தின் ‌‌ிலீஸையும் தள்ளி வைத்துள்ளனர்.

விநியோகஸ்தர்கள் அதிக பணம் கேட்பதால் வாரணம் ஆயிரம் படமும் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil