அக்டோபர் 31- ம் தேதி ஸ்ரேயா நடித்த ஹாலிவுட் படம் தி அதர் எண்ட் ஆஃப் தி லைன் வெளியாகிறது. இந்தப் படத்தில் ஸ்ரேயாவுடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்லி மெட் கேப்பும் நடித்துள்ளார். அசேக் அமிர்தராஜ் படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் மும்பையில் பணிபுரியும் கால் சென்டர் பெண்ணாக நடித்துள்ளார் ஸ்ரேயா. இவருக்கும் படத்தின் ஹீரோ ஜெஸ்லிக்கும் நெருக்கமான காட்சிகள் படத்தில் உள்ளது. முக்கியமாக ஹாலிவுட்டுக்கே உரித்தான லிப் டு லிப் முத்தக் காட்சி.
படத்தின் ட்ரெயிலரிலும் இந்த முத்தக் காட்சி இடம் பிடித்துள்ளது. ஹாலிவுட்டுக்கு காட்டிய இந்த தாராளத்தை ஸ்ரேயா தமிழ் சினிமாவிலும் காட்டுவாரா?