ஒவ்வொரு படம் வெளியாகும் முன்பும் பத்திரிகையாளர்களை சந்திப்பார் அஜீத். அவரது மனநிலையை பொறுத்து மனம் திறந்து பேசவும் செய்வார்.
நேற்று அவரிடமிருந்து அழைப்பு வந்தபோது அப்படி ஒரு எதிர்பார்ப்புடனே அனைவரும் பேனா பேடுடன் வந்திருந்தனர். ஆனால் கடைசி வரை வாய் திறக்கவில்லை அஜீத்.
அதிகம் பேச வேண்டாம்னு பெரியவர்கள் சொல்லியிருக்காங்க என்று பேட்டியை நாசூக்காக தவிர்த்தவர், ஒவ்வொரு நிருபரிடமும் தனித்தனியாக அவர்களது குடும்பம் குறித்து விசாரித்துக் கொண்டார்.
ஏகன் நன்றாக வந்திருக்கும் திருப்தியை அவரது முகத்தில் காண முடிந்தது. பசிக்கு விருந்தளித்தவர் செவிக்கு உணவளிக்காததில் அனைவருக்கும் வருத்தம்தான்.