மர்மயோகி படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. தொடர்ச்சியாக நூறு நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் த்ரிஷா அதற்குள் நாகார்ஜுனாவுடன் கிங், ஆர்யாவுடன் சர்வம், கெளதமின் சென்னையில் ஒரு மழைக்காலம் மூன்று படங்கள் முடித்தாக வேண்டும். சக்கரத்துக்கு பதில் இறக்கை கட்டிப் பறக்கிறார்.
சர்வம் படத்தின் எண்பது விழுக்காடு காட்சிகளே இதுவரை முடிந்துள்ளன. பாடல் காட்சி உள்பட இன்னுடம் பல காட்சிகள் முற்றுப்பெறவில்லை.
ஒரு பாடல் காட்சியை ஜெய்ப்பூர் அரண்மனையில் எடுக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். டூயூட் பாடல். ஆர்யா, த்ரிஷா நடிக்கிறார்கள்.
மூன்று படங்கள் முடிந்தபின் மர்மயோகி. அடுத்தப்படம் மர்மயோகி முடிந்த பிறகு என்பதில் உறுதியாக இருக்கிறார், த்ரிஷா.