Publish Date: Fri, 17 Oct 2008 (16:41 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)
கோவா! சொல்லும்போதே ஜில்லிட வைக்கும் இங்குதான் அடுத்தப் படத்தை சொல்லி அடிக்கிறார் வெங்கட் பிரபு.
உள்ளூர் பிகர் போரடித்து வெளிநாட்டு வெள்ளை தோலை கரெக்ட் செய்ய கோவா வரும் நான்கு இளைஞர்களை பற்றிய கதையாம் கோவா. அனைவரும் புதுமுகங்கள் என்று சொன்னாலும் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் ஜெய், வைபவ், பிரேம்ஜி மூவரும் படத்தில் உண்டு என்று முணு முணுக்கிறார்கள்.
சரோஜா களைப்புதீர மலேசியா சென்ற வெங்கட் பிரபு, கோவாவை பாலீஷ் செய்து பளபளப்பாக்கியிருக்கிறார். இனி தம்பி யுவனுடன் களத்தில் இறங்க வேண்டியதுதான் பாக்கி.
அசத்துங்க தலைவா!