மறைந்த நடிகை ஸ்ரீவித்யா பெயரில் ஆண்டுதோறும் சிறந்த நடிகை விருது வழங்க இருப்பதாக, அவர் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளையின் தலைவர் கணேஷ்குமார் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
புற்றுநோயால் மரணத்தை தழுவிய ஸ்ரீவித்யாவை அவரது இறுதி நாட்களில் கவனித்துக் கொண்டவர், கணேஷ்குமார். இவர் கேரளாவில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
ஸ்ரீவித்யா மறைந்த பிறகு, அவர் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, அதன் தலைவராக கணேஷ்குமார் செயல்பட்டு வருகிறார்.
இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான ஸ்ரீவித்யா விருதுக்கு மீரா ஜாஸ்மீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மம்முட்டியுடன் இவர் நடித்த 'ஒரே கடல்' படத்துக்காக மீரா ஜாஸ்மின் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.