சசியின் 'பூ' படத்தின் போஸ்ட் புரொக் ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. ச.தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய் சிறுகதைக்கு, செலுலாயிடில் உயிர் தந்திருக்கிறார் சசி.
ஏற்கனவே எழுதப்பட்ட கதையை சசி திரைப்படமாக்குவது இதுவே முதல்முறை. கதை எழுதப்பட்ட ராஜபாளையம் பகுதியில் மொத்த படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.
ஐந்து மாதங்கள் ராஜபாளையம் வட்டார வழக்கு பேசி நடித்துள்ளார் அறிமுக நடிகை பார்வதி. படத்தில் இவருக்கு மேக்கப் கிடையாது. சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.
படத்தில் எழுத்தாளர்கள் சிலரையும் நடிக்க வைத்துள்ளார் சசி. பாடல் காட்சி ஒன்றுக்காக குதிரை போன்ற மிருகங்களை வெறும் மரக்குச்சிகளை கொண்டே உருவாக்கியிருக்கிறார்கள்.
சுருக்கமாக, புழுதி மணத்துடன் மலர்ந்திருக்கிறது சசியின், பூ!