Publish Date: Thu, 16 Oct 2008 (15:32 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)
ஹரியின் 'சேவல்' எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருக்கிறதாம். நல்ல விஷயம். சந்தோஷமாகதானே இருக்க வேண்டும்? ஆனால் சோகத்துடன் இருக்கிறார் ஹரி.
இதுவரை இயக்குனராக இருந்தவர் 'சேவல்' முலம் விநியோகஸ்தராகலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் தயாரிப்பாளர் ஜின்னா, ஹரியிடம் சொல்லாமலே; படத்தை ஐங்கரனுக்கு மொத்தமாக விலை பேசியிருக்கிறார். இதனால் ஹரி அப்செட்.
'சேவல்' படத்தை முதலில் ஐங்கரன்தான் தயாரிக்க முன்வந்தது. அவர்களை தவிர்த்துதான் ஜின்னாவுக்காக படத்தை இயக்கினார் ஹரி. ஐங்கரனுக்கு படத்தை விற்பது தொரிந்திருந்தால் அவர்களுக்கே படத்தை இயக்கியிருப்பேனே என்று இப்போது வருத்தப்படுகிறாராம் ஹரி.