Publish Date: Thu, 16 Oct 2008 (15:31 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)
தமிழ் சினிமாவில் வந்த ரீ மிக்ஸில் ஏறக்குறைய அனைத்தும் பழைய பாடலுக்கு திருஷ்டி கழிப்பதாகவே அமைந்திருக்கிறது. இருந்தும் விடாப்பிடியாக ரீ மிக்ஸை தங்கள் படங்களில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும்.
தொன்றுதொட்டு தமிழர்களின் மனம் கவர்ந்த பாடலான செந்தமிழ் தேன் மொழியாள் பாடலும் நம்மவர்களின் ரீ மிக்ஸ் பசிக்கு இரையாகியுள்ளது.
இயக்குனர் ரமணா நாயகனாக நடிக்கும் குதிரை படத்தில் இந்தப் பாடலை ரீ மிக்ஸ் செய்திருக்கிறார்கள் இசையமைப்பாளர்கள் சபேஷ் முரளி.
காலத்தால் அழியாத பாடல்களை கை வைக்காமல் இருப்பதற்காவது தடை கொண்டு வந்தால் நல்லது.