Publish Date: Thu, 16 Oct 2008 (15:30 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)
பொதுவாக குத்து பாடல்களைதான் ரீ மிக்ஸ் செய்வார்கள். கொஞ்சம் வித்தியாசமாக நூற்றுக்கு நூறு படத்தில் மெலடி பாடலொன்றை ரீ மிக்ஸ் செய்கிறார்கள்.
பாலசந்தர் இயக்கிய நூற்றுக்கு நூறு படத்தை அதே பெயரில் இயக்குனர் செல்வா ரீ மேக் செய்கிறார். வினய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் பாடல் ரீ மிக்ஸ் செய்யப்படுகிறது.
இந்தப் பாடல் பாலசந்தர் இயக்கிய நூற்றுக்கு நூறு படத்தில் இடம்பெற்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.